சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சனையில் அரசு ஐடிஐ மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் சில மாணவர்களை மூளைச்சலவை செய்த கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர்.

அதில் ஒரு மாணவர் கஞ்சாவை விற்காமலும், மற்றொரு மாணவர் கஞ்சா விற்ற பணத்தை கொடுக்காமலும் இருந்தது கஞ்சா வியாபாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த இரு மாணவர்களையும் ஓமக்குளம் பகுதியில் உள்ள விடுதி அறைக்கு வரவழைத்த கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் ஏன் கஞ்சாவை விற்கவில்லை எனவும், விற்ற கஞ்சாவிற்கான பணத்தை ஏன் கொடுக்கவில்லை என்றும் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில், கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி உடப்பு சிவா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவர்களை தாக்கிய வினோத் குமார் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாக்கப்பட்டதை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட விமல்ராஜ் என்பவனை அண்ணாமலை நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Chidambaramganja salesgovernment ITI students attackedGanja dealers attacked students
ShareTweetSendShare
Previous Post

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Next Post

தவெக தலைவர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies