பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீடு நீக்கம் - நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Mar 22, 2026, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீடு நீக்கம் – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 2010ம் ஆண்டு ரூபாய் குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் திமுக முற்றிலும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள அவர்,

ரூபாய் சின்னம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக திகழ்வதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

UPI-ஐ பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதிமொழி எடுப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,

மாநில பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானது என கூறியுள்ளார்.

இது பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலையை குறிப்பதாகவும்,

முற்றிலும் தவிர்க்க வேண்டிய மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இது உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags: Finance Minister Nirmala SitharamanDMK governmentremoving the rupee symbol from the budget documentsdmks separatist sentiments.
ShareTweetSendShare
Previous Post

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

Next Post

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies