பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்போது தமிழகத்தில் நடத்த முடியாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனில் மாநில உரிமை பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் ஆனால் தமிழகத்தில் எடுக்க முடியாதா? என்றும் அவர் வினவினார்.
இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா? என்றும், தேர்தல் வரும்போது பழைய வேஷத்தை கலைத்துவிட்டு புதிய வேடத்தை பூசிக் கொள்கிறார்கள் என்றும் சீமான் கூறினார்