நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நூர் நிஷாவின் சகோதரியிட ம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகிர் உசைன் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 18-ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை நடப்பதற்கு முன்பாக தன்னை சிலர் கொலை செய்ய முயல்வதாகக் கூறி அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.
போலீசாரின் அலட்சியத்தால் கொலை நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோபால கிருஷ்ணன், செந்தில் குமார் ஆகிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை முகமது தௌபிக், பீர் முகமது உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான நூர் நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, நூர் நிஷாவின் சகோதரி அலி பாத்திமாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.