காவலரை கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் கும்பலுக்கு தைரியம் வந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலர்களையாவது திமுக அரசு காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நேரம் இல்லா நேரத்தில் பேச திமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மக்களை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை என்றும், உதயநிதி பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது என்பதே முதலமைச்சரின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக தான் சட்டமன்றம் என்பதை முதலமைச்சரும், சபாநாயகரும் உணர வேண்டும் என்றும், திமுக அரசால் தமிழ்நாடே தலைகுணிந்து நிற்பதாகவும் அவர் கூறினார்.