2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, வரி பகிர்வாகத் தமிழகத்திற்கு சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த அவர், தமிழகத்திற்குக் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதை விட 207 சதவீதம் அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.