எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சராகவும், தற்போது வனத்துறை மற்றும் காதி அமைச்சராகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொன்முடியை கட்சி பதவியில் நீக்குவதன் மூலம் பொதுமக்கள் அதனை கடந்து செல்வார்கள் என நினைப்பது துரதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொன்முடி போன்ற அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்து தர்மத்தின் (சைவம் & வைணவம்) தூண்கள் மீது திமுக தொடர் தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, தங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.