திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக கவுன்சிலர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை, தனிநபர் ஆக்கிரமித்தது தொடர்பாக திமுக கவுன்சிலர் ராமதாஸ் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அவரிடம் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கருமண்டபம் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்களுடன் இணைந்து திமுக கவுன்சிலர் ராமதாஸ் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.