பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தீவிரமடைந்ததால் இஸ்ரேல், காசா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ காயமடைந்துள்ளனர்.
ஜனவரி 19-ம் தேதி முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை. இந்த நிலையில், தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.