சென்னை வேளச்சேரியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு மின் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்த நிலையில், இந்த பந்தலுக்குத் தேவையான மின்சாரம் அருகிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான மின் கம்பத்திலிருந்து திருடப்படுகிறது.
மேலும், பாதசாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடைபாதை அருகே இதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.