லாரி ஸ்ட்ரைக் எதிரொலியால் கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் எனத் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாகத் தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
3வது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் மட்டுமின்றி பிற லாரிகளும் தற்போது இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், லாரி ஸ்ட்ரைக் முடிவுக்கு வரும் வரை தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.