கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு கறி விருந்துடன் மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூரில் உள்ள திருமண மண்டபமொன்றில், ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்துடன், மதுபானம் மற்றும் தலா 200 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் மதுபானம் அருந்துவது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனைக் கண்ட இணையவாசிகள், இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதையே திமுக தனது தொழிலாகக் கொண்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.