சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சமூக நீதிக்காக அரசின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய அரசின் இந்த முடிவு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய அனைத்துப் பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கும் என்று கூறியுள்ள அமித்ஷா
சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலினத்தவர்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதைகளை அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.