சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் சமூக நீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது என கூறியுள்ள அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.