மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் ரஷியாவில் நடக்கும் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக ரஷ்யாவின் மாஸ்கோவில் மே 9-ம் தேதி நடைபெறும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடிக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார்.
பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலால் பிரதமர் மோடி ரஷ்யா செல்வதைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.