பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
)இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார் என ஆவேசமாக தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புது சகாப்தத்தை எழுதியுள்ளதாகக் கூறிய அவர், தீவிரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடைபெற இயலாது எனத் தெரிவித்தார்.
இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் காலம் என்று குறிப்பிட்ட அவர், இது போருக்கான காலம் அல்ல என்றும், அதே வேளையில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர ஓட முடியாததைப் போலவே, தீவிரவாதமும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானது தான் எனவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.