பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கைகளில் மூவர்ண கொடி ஏந்தி பிரதமர் மோடிக்கும், ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மூவர்ண கொடி பேரணிக்குப் பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெறுவதாக தெரிவித்தார்.
ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக போக முடியாது என்றும், யாருக்காகவும் இந்த போர் நிறுத்தப்படவில்லை என்றும் பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டினார்.பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் எனறும் அவர் குறிப்பிட்டார்.
தேச உணர்வு இருந்தால் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களை திமுக அரசு கைது செய்யும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார.