புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு - சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 9, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2025, 06:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் 300-க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினர் சேர்ந்து பட்டியலின மக்களை தாக்கி வீடுகளுக்கு தீவைத்ததாகவும்,  காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாமல் கந்துடைப்புக்காக சிலரை மட்டும் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் தலைமையில் தனிக்குழு அமைத்து இழப்புகள் குறித்து அறிக்கை அளிப்பதோடு,  தாக்குதல் நடத்திய அனைத்து நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் ஏன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் மற்றும் சம்பவம் நடந்த இடத்தின் மே 4 முதல் 7-ம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags: PudukkottaiMadurai bench of the High Courtcheduled Caste people attacke caseVadakadu Mariamman Temple festivalcctv evidence
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

Next Post

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies