தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். NDA கூட்டணியில் தொடர்வதை யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பதை பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் இணைக்கவில்லை என்றால் மாவட்ட ரீதியாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமித் ஷா தமிழகம் வந்தபோது நேரம் கேட்டிருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்பார் என்றும், அரசு நிர்வாகத்தில் திமுக அரசு தோல்வி அடைந்து வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் ஜெ.பி.நட்டா அறிவித்த வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருந்ததாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.