சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது - உயர் நீதிமன்றம்
Sep 10, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2025, 07:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், மண்டல ஐஜி மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பாக எந்தவித புகார்களும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து இதே நிலை தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் எனவும்,  விரைவில் இந்த வழக்குகளில் உரிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

 

Tags: karurMadurai high courtScheduled Caste people in worshipping case
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

Next Post

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவதன் ரகசியம் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies