தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்றும் தேச உணர்வின்றி பேசுபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற மூவர்ண பேரணியில் அவர் பங்கேற்று பேசினார். பஹல்காம் தாக்குதல் மூலமாக மதக் கலவரத்தை தூண்ட பயங்கரவாதிகள் முயற்சித்ததாக தெரிவித்தார். இரு பெண் அதிகாரிகளை வைத்தே பாகிஸ்தானை பிரதமர் மோடி நடுங்க வைத்ததாகம், தீவிரவாதத்தை அடித்து நொறுக்க பிரதமர் மோடி நாடு நாடாக சென்றதாகவும் கூறினார்.
மீண்டும் தாக்குதல் நடந்தால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் காணாமல் போகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார.
“தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்றும், தேச உணர்வு இல்லாமல் பேசுபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
“