எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டதாகக் கூறினார். பயங்கரவாதத்தின் வேர்களை இந்திய ராணுவம் துல்லியமாக அழித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய மக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்த பாகிஸ்தானை, தனது நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் மண்டியிட வைத்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாகவும், அறுவை சிகிச்சை நிபுணரைப் போலே திறமையாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டுவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.