ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் விமானப்படையின் விரைவான மற்றும் துணிச்சலான நடவடிக்கைக்கு தலை வணங்குவதாக தெரிவித்த்துள்ளார்.
பாரத மாதாவைப் பாதுகாப்பதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றும், நமது வான் பரப்பின் பாதுகாவலர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.