பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இதில், அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான குழு, இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியது.
அதன்பின் பேட்டியளித்த சசிதரூர், இரட்டை கோபுர நினைவுச் சின்னத்தைப் பார்வையிடுவது அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகக் கூறினார்.
மேலும், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.