வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? - உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 13, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2025, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் உதய நிதி ஸ்டாலின் அவர்கள். தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக உதயநிதி கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்ச் 2011-ல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின் போது, ​​CBI கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சோதனை செய்ய, கீழே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா?

அன்று பயம் காட்டி பேரம் செய்தது அம்மையார்  சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசாங்கம் தான், பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களோ, பாஜக-வோ அல்ல! அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்,

அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று உதயநிதி  அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறது போல.

கேள்வி, நீங்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பயப்படுகிறீர்களா என்பது அல்ல! அவர் என்றுமே அரசியல் காழ்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகத் தலைவர்! நாட்டைக் காப்பதையும், வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதையும், நம் பழம்பெரும் நாகரிகத்தை மீட்டெடுப்பதையும் மட்டுமே உயிர் மூச்சாக நினைத்துச் செயல்பட்டு வரும் உன்னதத் தலைவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட நிலையில், திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டும ஆக, உண்மையான கேள்வி என்னவென்றால் – நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்! அந்த நீதியானது நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில்  சந்தேகமுமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Deputy Chief Minister UdhayanidhiTASMAC CASENayinar NagendranTasmac corruption case.tasmac case enquirykash BhaskaranEdEnforcement Directoratetasmactamil nadu government
Share
Tweet
SendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

Next Post

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies