தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது ஆகாஷ் தான் என்றும், டாஸ்மாக் விவகாரத்தில் அறிவாலயத்தை அதகலப்படுத்த போவதும் ஆகாஷ் தான் என தெரிவித்தார்.
அமலாக்கத் துறையின் செயல்பாடு சரிதான் என தெரிவித்த அவர், கோடைகால விடுமுறைக்கு பின்னர் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தின் தலைமை ஹாஜி உயிரிழப்பிற்கு பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.