பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒவ்வொரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையிலும் பிரதமரின் மோடியிள் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆபரேசன் சிந்தூர் மற்றொரு இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்தை கண்டால் இந்தியா இனி அமைதியாக இருக்காது என்பதை உலகிற்கு பறைசாற்றபபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்-
தனது மக்களையும் அதன் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு நாட்டின் வலிமை, துல்லியம் மற்றும் தார்மீக தெளிவை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகம் இந்தியாவை பார்க்கும் விதத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் – பண்டைய மதிப்புகளைக் கொண்ட ஒரு தேசமாக மட்டுமல்லாமல், ஞானம் மற்றும் வலிமை இரண்டையும் கொண்டு வழிநடத்தும் ஒரு உலகளாவிய சக்தியாக இந்தியா மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திரங்கா யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆபரேஷன் சிந்தூரின் முக்கியத்துவத்தை தமிழகம் முழுவதும் எங்கு சென்றாலும், மக்களிடமிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டின் தேசியவாத இளைஞர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பைப் பெற்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒவ்வொரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையிலும் பிரதமரின் மோடியிள் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.