குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!
Aug 24, 2025, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

Web Desk by Web Desk
Jun 1, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அரசை எதிர்ப்பவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பாகிஸ்தானின் ராணுவச் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இஸ்லாமாபாத்தில் உள்துறை செயலாளர் குர்ராம் முகமது ஆகாவுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில், மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடாகப் பாகிஸ்தான் விளங்குகிறது என்று  வாய் கூசாமல், பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். ஆனால், கள நிலவரமோ மோசமாக உள்ளது.

பாகிஸ்தானில் அஹ்மதியாக்கள் நிம்மதியாக வாழ முடியாது.  தொடர்ந்து துன்புறுத்துவது, அவர்களின் வழிபாட்டுத் தலங்களை எரிப்பது,  அவமானப் படுத்தி நாட்டை ஓட வைப்பது என அஹ்மதியாக்களைப்   பழிவாங்குகிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானில்  கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் ஒரே வேலை சாக்கடை, கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை மட்டுமே. மனிதர்களாகக் கூட கிறிஸ்தவர்கள் மதிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானின் ஒரு ஊரின் எல்லையில், சிறிய குடிசையில், ஒதுக்கப்பட்டவர்களாக வாழும் கட்டாயத்தில் தான் கிறிஸ்துவர்கள் கட்டாயத்தில் உள்ளனர்.

மத சிறுபான்மையினரைப் பாகிஸ்தான் எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு ஷியாக்கள் மற்றும் ஹசாராக்களின் மீது நடக்கும் கொலைகளே சான்றுகளாகும். பாகிஸ்தானில், இந்து சிறுமிகளைக் கடத்தி வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைப்பதும், வரும்படியாக அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற  கட்டாயப்படுத்துவதும் ஒரு நீண்ட கால செயல் திட்டமாகவே நடந்து வருகிறது.

இது போன்ற குற்றவாளிகளுக்கு அரசே பாதுகாப்பு தருகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம்  கேள்வி எழுப்பினால், புகார் கொடுத்தால், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி  தண்டிக்கப்படுகிறார்கள்.

ராணுவம் மற்றும் ஆளும் அரசின் உயர் தலைவர்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட மட்டுமே ஊடகங்கள் உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரங்களை அம்பலப் படுத்தும் பத்திரிகையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள்.மேலும், அவர்கள் பணிபுரியும் செய்தி நிறுவனங்கள் பெரும்பாலும் தடை செய்யப்படுகின்றன.

சமீபத்தில், பலூச் பத்திரிகையாளர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.  இது பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகிறது. மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான தனது மிருகத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பாகிஸ்தான் எப்போதுமே தவறான கதைகளைப் பரப்பும்.

வங்காளிகளுக்கு எதிராக இனப்படுகொலை செய்தது பாகிஸ்தான். பாகிஸ்தானின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற  வங்கத்தில் போராட்டம் நடந்தது. வங்கதேசத்தை ஆதரித்ததற்காக இந்தியாவை இன்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.  அதேபோல், இந்தியா பலூச் ஆயுதக் குழுக்களை ஆதரிக்கிறது என்ற பாகிஸ்தான் பொய் கூறுகிறது.  1948 ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பயன்படுத்தி பலூசிஸ்தானை ஆக்கிரமித்தது இந்தியா அல்ல. பலூச் மக்களுக்கு எதிராக ஐந்து பெரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றது இந்தியா அல்ல. பலூச் பழங்குடிமக்கள் திடீர் திடீர் என்று  காணாமல் போவதற்கு  இந்தியா காரணம் அல்ல.

பலூச் தேசிய இயக்கம் மற்றும் பலூச் குடியரசுக் கட்சியின் தலைவர்களையும், பலூச் மாணவர் அமைப்பின் எண்ணற்ற உறுப்பினர்களையும்  இந்தியா கடத்தி கொலை செய்யவில்லை. பலூச்  ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களைக் கடத்தி கொலை செய்த பாகிஸ்தான் அரசு, பலூச் குடிமக்களைக் கொன்று புதைகுழிகளில் புதைத்துள்ளது.  இந்தச் சூழலில், மக்களுக்கும் அவர்களின் மொழிக்கும் கூட  வித்தியாசம் கூட தெரியாமல் பலூச் மக்களை “பலூச்சி” என்று குறிப்பிடும் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, அவர்கள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும், அவர்களின் தலைவர்கள் யார் என்பதைத் தான் தீர்மானிப்பதாகவும் கூறுவது வேடிக்கை.

பாகிஸ்தானின் அறியாமையும் பலூச் பிரச்சினையைப் புரிந்து கொள்ளத் தவறியதும் அகமது ஷெரிப் சவுத்ரி பேச்சில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கூடுதலாக, பலூச் மக்களின் முக்கியத் தலைவரான டாக்டர் மஹ்ரங் பலோச்க்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் கூறியிருக்கும் பாகிஸ்தானுக்கு   அவரது புகழ் அவரது மக்கள் போராட்டத்திலும் மக்களின் நம்பிக்கையிலும் வேரூன்றியுள்ளது என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.

பாகிஸ்தானில் அரசு அட்டூழியங்களுக்கு எதிரான போராளி முகமாக  டாக்டர் மஹ்ரங் பலோச் மாறிவிட்டார். இந்த ஆண்டு டைம் பத்திரிகையின் 100 சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்  அமைதிக்கான நோபல் பரிசுக்கும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பலுசிஸ்தானில் தான் செய்துவரும் நீண்டகால அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசு ஆதரவு வன்முறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது பொய் பழிபோடுவதை வழக்கமாகவே வைத்துள்ளது வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத பாகிஸ்தான்.

Tags: பாகிஸ்தான்Targeted killing of protesters: Questionable minority security in Pakistanபாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு
ShareTweetSendShare
Previous Post

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது : ஜெய்சங்கர்

Next Post

பள்ளிகள் திறந்த முதல் 5 நாட்களுக்கு மாணவர்களின் புத்தக பைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies