கோவையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் நாசாவில் பணியாற்றுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கருமத்தம் பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் பார்க் கல்வி குழுமத் தலைவர் பி.வி.ரவியின் 80 ஆவது பிறந்த நாள் விழா, ஆயிரம் பிறை கண்ட அகவை நிறைவு என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய அண்ணாமலை, கோவையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் நாசா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் சாதித்து வருவதாகத் தெரிவித்தார்.