சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி - நயினார் நாகேந்திரன்!
Jan 14, 2026, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? என்று  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று.

திமுக அரசின் அவல ஆட்சியில் நமது சட்டம், ஒழுங்கின் வலிமையானத் தூண்களான வருங்கால வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் இப்படி நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது என்று  குறிப்பிட்டுள்ளார்.

“சட்டக் கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிடில் அரசு அவற்றை இழுத்து மூடி விடலாம்” என சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த போதும் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இத்தனை புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்? எனவே, கல்விக் கூடங்களில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத திமுக அரசின் அலட்சியத்தால் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, வெறும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சற்று ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என  முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன்Law College Students' Protest: Another Proof of DMK Government's Administrative Failure - Nayinar Nagendranசட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

Next Post

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies