சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? - அண்ணாமலை கேள்வி!
Jul 23, 2026, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என, சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக அரசு, வழக்கம்போல இந்தப் பிரச்சினையை மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது. அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு முதல் படியாக, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் அமைந்திருக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அனைத்து சட்டக் கல்லூரி மாணவியருக்கு அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: MK Stalinஅண்ணாமலை கேள்விWhy are law college students being harassed without even providing basic facilities? - Annamalai Questionசட்டக் கல்லூரி மாணவிசென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

Next Post

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

Related News

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies