புதுச்சேரி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் கதவை ஓட்டுநர் திறந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீது டிப்பர் லாரி மோதி உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த விபாலி ஜோ என்பவர் பட்டனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 15ஆம் தேதி பட்டனூர் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இருசக்கர வானத்தில் விபாலி ஜோ சென்றபோது அங்குச் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் கதவை ஓட்டுநர் திறந்துள்ளார்.
அப்போது, வாகனத்தின் கதவு மோதி நிலைதடுமாறி கீழே விழுந்த விபாலி ஜோ மீது அதே சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விபாலி ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.