பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை; அதேநேரம் ஏமாறுகிற கட்சியும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை; அதேநேரம் ஏமாறுகிற கட்சியும் இல்லை என தெரிவித்தார்.
கூட்டணி அமைத்ததில் தமது பங்கு இல்லை என்றும், இன்னொரு கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
சிபிஐ விசாரணையில் அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினரே வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி இருப்பது தெரிய வருகிறது என்றும், சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, தவறு செய்கிறார்கள் என்றால் என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க தமிழ்நாடு முதல்வர் என்ன செய்திருக்கிறார் என்றும், தெலுங்கானாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டு காவல்துறையினரின் சம்பளம் மிக மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.வெளியே உள்ள பணம் படைத்தவர்கள் காவல்துறையை தூண்டுவதாகவும் அண்ணாமலை கூறினார்.