சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்றும், மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார்.
மக்களை பற்றி கவலைப்படாத, திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்றும், நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் தனது வீட்டு மக்களை பற்றியே முதலமைச்சர் சிந்திக்கிறார் என்றும் தெரிவித்தார்.
50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? என்றும், மக்களுக்கு பிரச்னை என்றால் ஓடோடி வந்து உதவி செய்கின்ற ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்ததாகவும் அவர் கூறினார்.