மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ராமநாதபுரத்தில் பேசிய அவர்,திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி என தெரிவித்தார். கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்த அவர், மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாகவும் சாடினார்.
திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரத்திற்கு வர முடியும் எனவும், பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.