டெல்லியில் நீச்சல் குள ஊழியர்கள் இணைந்து சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெல்லியின் நரேலா அருகே உள்ள லம்பூரில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் அனில் குமார் மற்றும் முனில் குமார் ஆகிய இருவர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நீச்சல் குளத்துக்குச் சென்ற 9 வயது சிறுமிகள் இருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து இரவு முழுவதும் பூட்டி வைத்துள்ளனர்.
மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமிகளை மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன சிறுமிகள் சில நாட்கள் கழித்தே தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீச்சல் குள ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.