திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை திருமாவளவன்” இழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலின மக்களின் பிரச்னை குறித்து திருமாவளவன் எதுவும் பேசவில்லை எனறும், கூட்டணியில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி., சீட் பெறுவதே திருமாவளவனின் குறிக்கோள் என்றும் சாடினார்.
பட்டியலின மக்களின் நலனில் திருமாவளவனுக்கு அக்கறையில்லை என்றும், முன்னுக்குப் பின் முரணாக பேசுவது, அவர் தடுமாற்றத்தில் இருப்பதையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளதாகவும், அரசுப்பள்ளிகளுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்திவருவது பற்றி திருமாவளவன் கேள்வி கேட்கவில்லை என்றும் எல்-முருகன் தெரிவித்தார்.