தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள துப்பாக்கிப் பூங்காவில் பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் காலி யூரியா பைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலங்கானா மாநிலத்தில் யூரியா பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், யூரியா பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும் கோரிக்கை வைத்தனர்.