மீண்டும் கைகோர்த்த இந்தியா - சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?
Sep 2, 2025, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

Web Desk by Web Desk
Sep 1, 2025, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலான பயங்கரவாதத்தை வேரறுக்க, இந்தியாவும் – சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இரு தரப்பு உறவுகளை மேம்படுதத இந்தியா – சீனாவும் உறுதிபூண்டிருப்பது, அமெரிக்காவைக் கலக்கமடைய செய்திருக்கிறது..

7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்ற பிரதமர் மோடியால், இந்தியா- சீனா இடையேயான நல்லுறவு மீண்டும் துளிர்த்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தியான்ஜின் நகரத்தில் சந்தித்துப் பேசினர்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா – சீனா எல்லை மேலாண்மைத் தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கைலாஷ் மானசரோவர் யாத்திரைத் தொடக்கம், இந்தியா – சீனா இடையே மீண்டும நேரடி விமான சேவை உள்ளிட்டவைக் குறித்தும் பேசினார்.

இரு நாடுகளையும் சேர்ந்த 280 கோடி மக்களின் நலன்கள் நமது ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா சீனா ஒத்துழைப்பு மனிதக் குலத்தின் நலனுக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மூலம் இருதரப்பு உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிகரமான தலைவராகச் சீனா பொறுப்பேற்றதற்காகத் தங்களை வாழ்த்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, சீனாவுக்கு வருகைத் தர அழைப்பு விடுத்ததற்கும், இரு தரப்பு சந்திப்புக்கும் நன்றித் தெரிவித்தார்.
2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருமாறும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாகப் பேசிய சீனா அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவும், சீனாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள் என்று தெரிவித்தார். அண்டை நாட்டு நட்புறவுகளைக் கொண்ட சிறந்த நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியைப் பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும என்றும் வலியுறுத்தினார்.

மேலும் மூன்றாம் தரப்பு ஆதிக்கத்தைத் தவிர்த்து, சுயாட்சி, வர்த்தகத்தை மேம்படுத்த இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அண்மையில் இந்தியா – சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியிருப்பது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Tags: India and China join hands again: What is the message to America?PM MODI CHINA VISITamericausaDonald Trumpஇந்தியா - சீனா
ShareTweetSendShare
Previous Post

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

Next Post

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

Related News

உ.பி.யில் தொடர் மழை – யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி செல்லும் வெள்ளநீர்!

டெல்லியில் தொடர் மழை – கடும் போக்குவரத்து நெரிசல்!

ஜம்முவில் தொடர் மழை – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை பார்வையிட்ட முதல்வர் – அண்ணாமலை விமர்சனம்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நோக்கம் என்ன? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies