சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 09:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியின் பயணத்துக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் Hongqi L5 Limousine “ஹோங்கி” எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் “ஹோங்கி” கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சீன அதிபர்களுக்கு “ஹோங்கி” கார் ஒரு தேசிய அடையாளமாகும்.

Hongqi “ஹோங்கி” என்பது ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கின் காலத்திலிருந்து அதன் தலைவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு அதிநவீனச் சொகுசு ரகச் சீன கார் ஆகும். சீன மொழியில் Hongqi “ஹோங்கி” என்றால் சிவப்புக் கொடி என்று பொருள்.

சீன அரசுக்குச் சொந்தமான First Automobile Works எனும் நிறுவனத்தால் Hongqi “ஹோங்கி” கார்கள் தயாரிக்கப்படுகின்றன. சீனாவின் தேசிய பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் 1958-ல் தொடங்கப்பட்ட இந்தக் காரின் முதல் மாடல் CA72 ஆகும். தொடர்ந்து 1980-வரை CA770 மாடல்கள் வரை Hongqi “ஹோங்கி” கார்கள் தயாரிக்கப்பட்டன.

1990-களில் தொடங்கி, சீனத் தலைவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கியதால், Hongqi “ஹோங்கி” கார்  காணாமல் போனது.

பின்னர் Audi, Lincoln போன்ற வெளிநாட்டுக் கார்களை Hongqi “ஹோங்கி” என்ற பெயரில் விற்றனர். 2012 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கு உரையாற்றிய சீன அதிபர், சீனத் தலைவர்கள் சீனக் கார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாவோவுக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ராணுவத் தலைவர் மற்றும் நாட்டின் அதிபர் என்று சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் ஜி ஜின்பிங், அமெரிக்காவின் “தி பீஸ்ட்” என்ற சிறப்பு (Cadillac) காடிலாக் காரில் அமெரிக்க அதிபர் பயணிப்பதைப் போன்று Hongqi “ஹோங்கி” யைப் பயன்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, FAW நிறுவனம், மீண்டும் (Hongqi) “ஹோங்கி”-யைப் புதிய வடிவில் அறிமுகப்படுத்தியது. 2014ம் ஆண்டு நியூசிலாந்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் (Hongqi) “ஹோங்கி”-யை முதன்முறையாகக் கொண்டு சென்றார். 2019-ல் இந்தியா வந்திருந்த போதும், ஜின்பிங் இந்தக் காரில் தான் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்குச் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் Hongqi L5 கார்  தான் சீனாவின் விலை உயர்ந்த கார் ஆகும். Bentley Mulsanne, Rolls-Royce Ghost போன்ற கார்களை விடவும் மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் Hongqi “ஹோங்கி” தயாரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிகக் கனமான கட்டமைப்பு எனப் பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ள இந்தக் காரின் சிறப்புகளில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

வெளிநாட்டுத் தலைவர்களுக்கு Hongqi “ஹோங்கி” கார் மிகக் குறைவாகவே பயன்படுத்த தரப்பட்டுள்ளது. 1970-களில் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீனப் பயணத்தின் போது மாவோ இந்தக் காரையே அவரின் பயணத்துக்கு வழங்கினார்.

பிறகு, 2013 ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் François Hollande-க்கு Hongqi “ஹோங்கி” கௌரவ அடையாளமாக வழங்கப் பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், பிரதமர் மோடிக்கு Hongqi “ஹோங்கி” கார் வழங்கப்பட்டிருப்பது வெறும் மரியாதை மட்டும் அல்ல. அங்கீகாரத்தின் அடையாளமாகும்.

பிரதமர் மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகச் சீனாவுக்குச் சென்றுள்ளார். 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணமாகும்.

கடந்த அக்டோபரில் கசானில் மோடியும், ஷி ஜின்பிங்கும் சந்தித்த பிறகு, இரு நாடுகளின் உறவுகளில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுடனான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிப்பிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், டிராகனும், யானையும் இணைந்திருப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல, பங்காளிகளாக உள்ளன, இரு நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவைப் பிணக்குகளாக மாறக் கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுக்கும் அடையாளமாகவே பிரதமர் மோடி பயணிக்கச் சீனாவில் Hongqi “ஹோங்கி” கார் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய சீன உறவில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப் படுகிறது.

Tags: Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடிPM Modichina newsRoyal courtesy call from Chinese President: Prime Minister Modi travels in a red-flagged Hongqi carசீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை
Share
Tweet
SendShare
Previous Post

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies