சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!
Sep 5, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 07:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில், நாட்டிலேயே மிகப்பெரிய Aero engine test bed-ஐ ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Raphe mPhibr தயாரித்துள்ளது. இதை அறிமுகப்படுத்தி பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய ட்ரோன்கள் புதிய தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக மாறும் என்று தெரிவித்தார்.

பொதுவான விமானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது, Tejas, ரஃபேல் போன்ற போர் வமானங்கள் நம் நினைவுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத்துறையில் மாறிவரும் சக்திகளாக ட்ரோன்கள் உருவெடுத்திருப்பதாகக் கூறினார்.

இன்றைய இளைஞர்கள், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் புதிய சிந்தனையை, புதிய பாதையை உருவாக்குவதாக அவர்க் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும்போது, அமெரிக்காவோ, சீனாவோ அவற்றைக் கண்டறிய முடியாது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.

போர்க் கொள்கையில் ட்ரோன்களை இணைப்பது அவசியமானது என்றும், நவீனப் போர் உத்திக்கும் ட்ரோன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
ஆத்மநிர்பார்ப் பாரத் திட்டத்தின் கண்ணோட்டத்தில் தனியார்  பங்களிப்புடன் உருவாக்கப்படும் ட்ரோன்கள், தனது வலிமையைப் பிரதிபலித்து வருவதாகவும் கூறினார்.

ட்ரோன்களின் வரலாற்றை எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், ஆரம்ப காலத்தில் அவைக் கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ரஷ்யா, உக்ரைன் போரில் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், அவற்றை நமது போர்க் கொள்கையில் இணைப்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது நிரூபணமாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த ‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இதுபோன்ற ட்ரோன்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பலரின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. எனவேதான் ட்ரோன்கள் அடுத்த தலைமுறை ஆயுதம் என வர்ணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiadrdotoday newscentral minister rajnath singhஅமெரிக்காசீனாIndian drones pose a challenge: Even America and China can't predict themசவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள்
Share
Tweet
SendShare
Previous Post

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

Next Post

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies