"வரிச் சூதாட்டம்" : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!
Sep 6, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கும் நிலையில் இந்தப் பிரச்னையை மேற்கத்திய ஊடகங்கள் எப்படி அணுகுகின்றன என்பதைப் பார்க்கலாம்.

“அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா” இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப் அடிக்கடிச் சொல்லும் புகார்களில் இதுவும் ஒன்று.

இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு மறுத்துவிட்டது. அதனால் கோபமடைந்த ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதித்துள்ளார்.

அவரது நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் கூடுதல் வரி மூலம் அமெரிக்கா சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டதாகக் கூறுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் ட்ரம்ப்பின் முடிவைக் கடுமையாக விமர்சிக்கின்றன. கூடுதல் வரிவிதிப்பால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக விலைக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க மக்கள் ஆளாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன.

ராஜாங்க உறவுகளுக்கு மாற்றாக வணிக வற்புறுத்தல்களை முன்னிறுத்தினால் ஆசிய கண்டத்தின் முக்கியப் பங்காளியான இந்தியாவோடு இருக்கும் உறவு பாதிக்கப்படும் என அமெரிக்க MEDIA-க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாக BLOOMBERG தெரிவித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கத் தொழில்துறையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக WALL STREET JOURNAL கூறியுள்ளது.

அதிக வரி மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல என ஐரோப்பிய ஊடகமான THE GUARDIAN செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய செயல்களால் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் உறவு மேலும் வலுப்படும் என்றும் THE GUARDIAN எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இந்தியா அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பது உண்மை என்றாலும் அந்த நாடு தனிமைப்படுத்தப்படவில்லை என THE GUARDIAN கூறியுள்ளது. கூடுதல் வரி என்ற சூதாட்டம் மூலம் ராஜாங்க ரீதியிலான லாபத்தை அடைய அமெரிக்கா முயல்வதாக லண்டனைச் சேர்ந்த FINANCIAL TIMES தெரிவித்துள்ளது.

இப்படி முன்னணி ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளபோதும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பெரியண்ணன் மனப்பான்மையுடன் பிறநாடுகளை அச்சுறுத்துவது அமெரிக்காவுக்குப் புதிதல்ல என்றாலும் ட்ரம்ப்பின் செயல்கள் வரம்புமீறிச் செல்வதாக அமெரிக்க மக்களே குற்றம்சாட்டுகின்றனர்.

ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட தேசங்களுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். உலகின் பெரும் சந்தையாகக் கருதப்படும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், ஏற்கனவே இருக்கும் உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் ஐபோனில் தொடங்கி முக்கிய மருந்துகள் வரை இந்தியாவை நம்பியிருக்கிறது அமெரிக்கா. இந்த உண்மையை ட்ரம்ப் உணர்ந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.

Tags: "Tax Gambling": Western media slams Trumpவரிச் சூதாட்டம்americausaDonald Trumpமேற்கத்திய ஊடகங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

Next Post

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies