SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!
May 8, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபருடனும்,ரஷ்ய அதிபருடனும் நெருக்கமான அன்பை உறுதிப்படுத்திய நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இது உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படுகிறதா ? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐந்தாவது முறையாகச் சீனா நடத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்றது. 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இது எஸ்சிஓவின் வரலாற்றில் ‘இதுவரை இல்லாத மிகப்பெரிய’ உச்சி மாநாடு என்று கூறப்படுகிறது.

முதல் நாளில், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் கலந்து கொண்ட தலைவர்களுக்கு விருந்து வைத்தனர், அதைத் தொடர்ந்து வழக்கமான பாரம்பரிய புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி முன் வரிசையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நின்றார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டது இதுவே முதல் முறை யாகும். முன் வரிசையில் இருந்தாலும், இருவருக்கும் இடையே, குறைந்தது எட்டு பேர் இருந்தனர்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர்க் கைகுலுக்கி மூவரும் இயல்பாக உரையாடுவதையும், அந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மூவரையும் கடந்து செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

SCO உச்சிமாநாட்டின் போது அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜி ஜின்பிங்-க்குடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பிரதமர் ம்,மோடி பதிவிட்டுள்ளார். இது மூன்று தலைவர்களுக்கும் இடையிலான ஆழமான நட்பு ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.

முன்னதாக, பாரம்பரிய புகைப்பட அமர்வுக்குப் பிறகு, பின்னால் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், திடீரென ரஷ்ய அதிபர் புதினுடன், கைகுலுக்குவதற்கு ஓடி வருவதையும், சீன அதிபர்,அவரைக் கண்டும் காணாமல் தவிர்த்து விட்டு நடப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.

இது சர்வதேச தலைவர்கள் இருக்கும் மேடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் ஓரம் கட்டப்பட்டதையே காட்டுகிறது. பரிதாபமாகக் கவனத்தைத் தேடும் பாகிஸ்தான் பிரதமரின் நடத்தையைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் அவரைக் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே 2022-ல் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தனது ஹெட்ஃபோன்களைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது ? எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் சிரமப்பட்டதையும், எதிரில் இருந்த ரஷ்ய அதிபர் புதின் இதைப் பார்த்து சிரிப்பதையும் உலகம் பார்த்திருக்கிறது.

துருக்கி அதிபர் எர்டோகன், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி,பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கவில்லை. பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரைப் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதால், இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய- சீன உறவுகளை மறுகட்டமைக்கும் நோக்கில், இருநாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைத் தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலால் இரு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதால், இச்சவாலுக்குத் தீர்வு காண்பது அவசியம் என்று பிரதமர் மோடி, குறிப்பிட்டுள்ளார். எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை அழிப்பதில், சீனத் தரப்பிடம் இருந்தும் நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றதாக, மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்த பட்டுள்ளது.

முன்னதாக, இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையில் எந்த வகையான இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModipakistanchinaRoyal honours accorded to PM Modi at SCO summit: Pakistani PM sidelined
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

Next Post

வறண்டு காணப்படும் மூல வைகை ஆறு – குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies