இமாச்சல பிரதேசம் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
May 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை  சந்தித்து கலந்துரையாடினார்.

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இயற்கை  பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில், இமாச்சலுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடினார். அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.

பின்னர், அம்மாநில முதலமைச்சர்  சுக்விந்தர் சிங், ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி, வெள்ளப் பாதிப்பு குறித்து திரையிடப்பட்ட விளக்கக் காட்சியை பார்வையிட்டார்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல் மக்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளை அமைப்பது, பள்ளிகளை மீண்டும் கட்டுவது, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: PM ModiHimachal Pradesh - Prime Minister interacts with flood-affected people
ShareTweetSendShare
Previous Post

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Next Post

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies