திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரத்தேர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் நகர்த்தப்பட்டு மாற்று இடத்தில் நிறுத்தப்பட்டன.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளில் 15 கோடி ரூபாய் செலவில் கான்கிரிட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் மரத்தேர்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நகர்த்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டன.