சென்னையில் ஆளுநர் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிபி அலுவலகத்திற்கு வந்த ஒரு இமெயிலில், “ஆளுநர் மாளிகை மற்றும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீடு ஆகிய இடங்களில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும்” என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆளுநர் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் முடிவில், எந்தவித வெடிபொருட்களும் கண்டறியப்படாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து, சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.