சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவனுக்கு போலீஸ் எதற்கு மக்களை அடிப்பதற்கா என கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் மீதான தாக்குதலில் திருமாவளவன் நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்னையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யாதது ஏன்? கூட்டணி கட்சியினர் தவறு செய்யும்போது, நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு எப்படி மரியாதை வரும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கரூர் செல்ல, த.வெ.க., தலைவர் விஜய் அனுமதி பெற தேவை இல்லை. தமிழகத்தில் எல்லாரும், எந்த இடத்திற்கு செல்லவும் உரிமை உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை, போலீசார் தான் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.