காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஞ்சிபுரத்தில் இருமல் மருந்து தயாரித்த நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருமல் மருந்து விவகாரத்தை தமிழக அரசு மூடி மறைப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
இதேபோல், சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மீது பழிபோடுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் திருமாவளவன் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும்,
கருத்து சுதந்திரம் குறித்து திருமாவளவன் பேசுவது நியாயமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவன் குழம்பி போயுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.