அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்,
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன..? என்றும், கூட்டணி வைக்காவிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என சிலர் நினைக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு கட்டுப்பாடு உள்ளது என்று திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு நிறைவு செய்யவில்லை என்றும், 59 ஏரிகள்தான் நிரம்பி உள்ளன; மீதம் உள்ள ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேட்டூர் அணை தண்ணீர் உபரியாக வெளியேறி கடலில் கலக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.