பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் யாத்திரையாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.
அப்போது, ஆளும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் நிர்வாக சீர்கேட்டால் தவிக்கும் தமிழக மக்களின் ஆற்றாமையை போக்கும் விதமாகவும், தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாகவும், நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” யாத்திரையின் துவக்கவிழா மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை-கொள்ளை, பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரம், பெண்களுக்கு எதிரான வன்முறை, சாதிய வன்கொடுமைகள் மற்றும் லாக்-அப் மரணங்கள் என்று, நாள்தோறும் தமிழக மக்கள் அடையும் துயரங்கள் ஏராளம் என கூறியுள்ளார்.
பல நூறு வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, எவற்றையும் நிறைவேற்றாமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி குடும்ப நலனே கொள்கையென ஆட்சி செய்து வரும் இந்த ‘ஸ்டிக்கர் திராவிட மாடல்’ ஆட்சியை தூக்கியெறிய தமிழக மக்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களின் துயர் துடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பதை, இன்றைய மாநாடும், நயினார் நாகேந்திரன் யாத்திரையும் உறுதி செய்யும் என்றும் எல்.முருகன் கூறினார்.